மேஷம்: இன்று பதட்டமான சூழ்நிலைகள் காணப்படும். அதனை சமாளிப்பதற்கு கால தாமதமாகும். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு இது உகந்த நாள் அல்ல. சில சௌகரியங்களை விட்டுகொடுக்க நேரும்.
ரிஷபம்: இன்று ஆன்மீகத்தில் ஈடுபடவேண்டிய சூழல் ஏற்படும். அது உங்களுக்கு ஆறுதலைத் தரும். இன்று வெற்றிகரமான பலன்களை காண்பதற்கு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இன்று பணிகள் நிலுவையில் இருக்கும். தாமதங்கள் காணப்படும்.
மிதுனம்: இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாள். உங்களின் உறுதியும் தைரியமும் உங்களுக்கு நல்ல பலனை அளிக்கும். மொத்தத்தில் இன்று காணப்படும் வளர்ச்சி உங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும்.
கடகம் : இன்று உற்சாகமான நிலையை பராமரிப்பீர்கள். அதிக சிந்தனைகளை தவிர்த்தல் வேண்டும். ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் அமைதி பெறலாம்.பணிகள் அதிகமாக காணப்படும். எனவே தவறுகள் நேரலாம்.
சிம்மம்: இன்றைய நாள் உங்கள் பொறுமையை சோதிக்கும் நாள். மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்க வேண்டும். உங்களுக்கு சாதகமான முடிவுகளை எடுக்க தெளிவான மனதுடன் இருக்க வேண்டும்.
கன்னி: இன்று பலன்களில் ஏற்றத்தாழ்வு காணப்படும். உங்கள் பணிகள் சுமுகமாக நடக்க நீங்கள் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும். சில சமயங்களில் நம்பிக்கை இழப்பீர்கள். நல்ல பலன்களைப் பெற நம்பிக்கையோடு இருங்கள்.
துலாம்: இன்று முன்னேற்றமான நாள். எதிர்காலம் பற்றிய பரந்த நோக்கு கொண்டிருப்பீர்கள். உங்கள் இலக்குகளில் வெற்றி பெற கடினமாக உழைப்பீர்கள். இடையில் ஏற்படும் தடைகளை முறியடிப்பீர்கள்.
விருச்சிகம்: இன்று சுமுகமான பலன்கள் காணப்படும். உங்கள் இலக்குகளை அடைய இன்றைய நாளை பயன்படுத்துவீர்கள். உங்கள் வளர்ச்சி இன்று உறுதி. இன்று முக்கியமான முடிவுகளை எடுக்கலாம்.
தனுசு: இன்று நீங்கள் எந்த விஷயத்தையும் இலேசாக எடுத்துக்கொள்ளவேண்டும். இன்று புதிய மனிதர்களின் சந்திப்பை பெறுவீர்கள். இதனால் உங்களின் தொடர்பு வட்டாரம் விரிவடையும். வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
மகரம்: இன்று நீங்கள் தன்னம்பிக்கை இழக்கக் கூடிய கடினமான சூழ்நிலை காணப்படும். நம்பிக்கையுடன் சவால்களைக் கையாள வேண்டும். பிரார்த்தனையில் ஈடுபடுவது நல்ல பலனைத் தரும்.
கும்பம்: இன்று நற்பலன்கள் கிடைக்கும் நாள். முன்னேற்றத்தை நோக்கி செல்வீர்கள். முக்கியமான முடிவுகள் இன்று பலன் தரும்.உங்கள் தனித் திறமைக்காக பாராட்டப்படுவீர்கள்.
மீனம்: இன்று நீங்கள் விரும்பிய பலன்கள் கிடைக்கும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். உங்களுக்கு சாதகமான பலன்களை தரக்கூடிய திட்டங்களை வகுப்பீர்கள். பணியிடச் சூழல் முன்னேற்றகரமான பலன்களைத் தரும்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…