ரஷ்யாவில் 400 கிலோ எடையுள்ள பளுவை தூக்கும் போட்டியில் கலந்துகொண்டவரின் முழங்கால் சவ்வு கிழிந்தது.
ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் செடிக் என்ற பளு தூக்கும் வீரர் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பளுதூக்கும் போட்டியில் 400 கிலோ எடை கொண்ட பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது அவர் 400 கிலோ எடையுள்ள பளுவை தூக்கும் போது முழங்கால் எலும்பில் உடைவு ஏற்பட்டதால், அலெக்சாண்டர் வலியில் துடிதுடித்து அழுதுள்ளார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு குவாட்ரைசெப் எனும் தசைகள் கிழிந்துள்ளதாகவும், இணைக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
6 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரிடம் பேசிய மருத்துவர்கள், இரண்டு மாதங்கள் முழுமையாக ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் எந்த ஒரு கடினமான வேலையிலும் ஈடுபட கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர். அவர் இரண்டு மாதம் கழித்து நடக்கும்பொழுது கால்களை வேகமாக அசைக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். இவர் மீண்டும் பளுதூக்கும் போட்டியில் கலந்து கொள்ள முடியுமா என்பது இரண்டு மாதங்களுக்கு பிறகுதான் தெரியவரும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…