உலக சுகாதார அமைப்பிற்கு 30 நாட்கள் கெடு விதித்த ட்ரம்ப்.! பதிலடி கொடுத்த சீனா.!

Published by
மணிகண்டன்

சீனா அரசிற்கு சாதகமாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதில்லை என 30 நாட்களுக்குள் நிரூபிக்க வேண்டும். அப்படி  இல்லையென்றால், உலக சுகாதார அமைப்பிற்கு தரப்படும் நிதியை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, அதன் உறுப்பினர் நாடுகள் பட்டியலில் இருந்து அமெரிக்கா விலகிவிடும் என ட்ரம்ப் சுகாதார அமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளார்.  

உலக சுகாதார அமைப்பு (WHO -World Health Organisation) கொரோனா விவகாரத்தில் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி அமெரிக்காவிடம் இருந்து செல்லும் நிதியை ட்ரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிவரும் நிலையில், ட்ரம்ப்  உலக சுகாதார நிறுவன தலைவருக்கு கடிதமும் எழுதியுள்ளார். 

அதில், சீனா அரசிற்கு சாதகமாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதில்லை என 30 நாட்களுக்குள் நிரூபிக்க வேண்டும். அப்படி  இல்லையென்றால், உலக சுகாதார அமைப்பிற்கு தரப்படும் நிதியை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, அதன் உறுப்பினர் நாடுகளின் பட்டியலில் இருந்து அமெரிக்கா விலகிவிடும் என குறிப்பிட்டிருந்தார். 

இதற்கு பதிலளிக்கும் வகையில்,சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ட்ரம்பின் கடிதம் தெளிவற்ற நிலையில் இருக்கிறது. கொரோனாவை தடுக்க நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து, சீனா மீது பழிபோட ட்ரம்ப் முயற்சி செய்து வருகிறார். 

கொரோனாவை எதிர்த்து உலக நாடுகளோடு இணைந்து அமெரிக்கா செயல்படவேண்டும். உலக சுகாதார அமைப்பிற்கு உறுப்பு நாடுகள் உரிய நேரத்தில் நிதி செலுத்த வேண்டும். இந்த சமயத்தில் இதனை வைத்து பேரம் பேச கூடாது. கொரோனா சமயத்தில் அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிற்கு நிதியை நிறுத்துவது அமெரிக்கா அதன் கடமையை மீறும் செயலாகும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக சீனா உலக சுகாதார அமைப்பிற்க்கு 50 மில்லியன் டாலர் வழங்கியுள்ளது.  

Published by
மணிகண்டன்

Recent Posts

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

11 minutes ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

23 minutes ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

1 hour ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago