நார்வேயில் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) போர் பயிற்சியின் போது விமான விபத்தில் நான்கு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் இன்று இந்தத் தகவலைத் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை இரவு நடந்த இந்த விபத்தில் நான்கு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததாக ஜோனாஸ் ஸ்டோர் ட்வீட் செய்துள்ளார்.
அவர் ட்விட்டரில், ‘இந்த அமெரிக்க வீரர்கள் நேட்டோவின் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார். நோர்வே இராணுவம் கூறுகையில், விபத்துக்குள்ளான விமானம் அமெரிக்க கடற்படையின் V-22B Osprey விமானமாகும்.
நேட்டோ உறுப்பு நாடுகள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன:
நேட்டோ உறுப்பு நாடுகளின் வீரர்கள் கடுமையான குளிருக்கு நடுவே நார்வே ராணுவத்துடன் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். இந்த பயிற்சி உக்ரைன் போருக்கு நீண்ட நாட்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டது என நார்வே தெரிவித்துள்ளது.
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில்…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…