, ,

பாதாள அறையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்.. இதுதான் காரணம்!

By

வாஷிங்டன் வெள்ளை மாளிகை முன்பு நடைபெற்ற போராட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப், அவரின் மனைவி மற்றும் அவரின் மகன் பேரன் ஆகியோரின் பாதுகாப்பு கருதி அவர்களை பாதாள அறையில் தங்கவைக்கப்பட்டனர்.

அமெரிக்காவில் மின்னபோலிஸ் நகரில் காவல் அதிகாரி ஒருவர் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ச் பிளாயீடு என்பவரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியதால், அவர் உயிரிழந்தார். இதனை கண்டித்து, கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெள்ளைமாளிகை முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த போராட்டத்தின்போது, அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவரின் மனைவி மற்றும் அவரின் மகன் பேரன் ஆகியோரின் பாதுகாப்பு கருதி, அவர்களை பிரத்யேக பாதாள காவலர்கள் அறையில் அவர்களை தங்க வைத்தனர். மேலும், போராட்டம் ஓய்வுக்கு வந்த ஒரு மணிநேரத்திற்கு பிறக்கவே அவர்கள் மேலே வந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தனர்.

Dinasuvadu Media @2023