பிரபல நடிகர் விஜய் அவர்களின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அண்மையில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி துவங்கியுள்ளதாக தற்போது பரபரப்பு எழுந்துள்ளது.
இதனையடுத்து, விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும், இந்த கட்சியில் தனது ரசிகர்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டாம் எனவும், கட்சியில் தனது புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் அவ்வாறு செய்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், நேற்று மதியம் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள், விஜய் பெயரில் 1993 ல் துவங்கிய நற்பணிமன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டிய தேவை தனக்கு இருந்ததால் தான் அவ்வாறு செய்ததாகவும், அதற்கும் விஜய்க்கும் சம்மந்தமில்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இது குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் பிகைண்ட்வுட்ஸிடம் பேட்டி அளிக்கையில், “விஜய் சின்ன பாய்சன் (poison) வட்டத்திற்குள் சிக்கிக்கொண்டு இருக்கிறார், அதுல இருந்து அவரை நா வெளியே எடுக்கணும் என்று கூறினார். நிச்சயமாக நல்லது நினைக்கிறவங்க மத்தியில் கடவுள் இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று கூறினார், அதற்கு இவரிடம் கடவுள் இருக்கிறார்…! விஜய் இருக்காரா? என்று கேட்டபோது, அவர் தான் எனக்கு கடவுள் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இன்னைக்கு வரைக்கும் அவரை குழந்தையாக நினைத்துக் கொண்டிருக்கிறேன் நான் அவருக்கு நல்லது பண்ணணும்னு நினைக்கிறேன் நான் பண்ணிக்கொன்டே இருக்கிறேன் உயிர் இருக்கும் வரை பண்ணுவேன் என்று தெரிவித்ததோடு பிள்ளையை நல்ல நடிகனாக வளர்க்க என் தொழிலையே விட்டுவிட்டு கூலி வேலை போல பியூன்வேலை பார்த்துள்ளேன்’’ என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…