ஒட்டு மொத்த ட்வீட்டரை ஸ்தம்பிக்க வைத்த ஒற்றை ட்வீட்…!!ட்ரண்டாகும் ஹேஷ்டேக்குகள்..!

Published by
kavitha

நடிகர் விஜய்  நேற்று வேன் மீது ஏறி எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்ட நிலையில் அது ட்விட்டரில் 3 ஹேஷ்டாக்குகளில் வைரலாகி வருகிறது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது. அதில் படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்னை அழைத்து வரப்பட்டு நீலாங்கரை, சாலிகிராமம், பனையூர் உள்ளிட்ட வீடுகளில் சுமார் 20 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடைபெற்று நிறைவடைந்தது. அதை தொடர்ந்து நடிகர் விஜய் நெய்வேலியில் உள்ள படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அப்போது படப்பிடிப்பு அங்கு நடத்த கூடாது என்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம்  செய்தனர். பின்னர் விஜயின் ஏராளமானோர் ரசிகர்கள் அங்கு குவிந்ததால் படப்பிடிப்பு முடித்துவிட்டு திரும்பும் போது ரசிகர்களுக்கு கையசைத்து உற்சாகப்படுத்தி சென்றார்.அப்போது அங்கிருந்த வேன் ஒன்றின் மீது ஏறி ரசிகர்களை நோக்கி கையசைத்தார் பின்னர் தனது செல்போனை எடுத்து ரசிகர்ளோடு வேன் மீது இருந்தவாறே செல்பி எடுத்து உற்சாகப்படுத்தி விட்டு சென்றார்.

Image

இந்நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன்  தான் எடுத்துக்கொண்ட செல்ஃபியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்திய நிலையில் அது சமூகவலைத்தலங்களில் வைரலானது.இந்நிலையில் விஜய் எடுத்த அந்த செல்ஃபி தற்போது ட்விட்டரில் இந்தியா அளவில் #ThalapathyVIJAYselfie | #Master   #ThalapathySelfie  எனும் 3 ஹேஷ்டேக்குகளில் இந்தியா அளவில் ட்ரெண்டாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

Live : கத்திரி வெயில் தாக்கம் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…

2 hours ago

தீவிரவாதிகளுக்கு உதவிய இளைஞர்? காஷ்மீர் ஆற்றில் குதித்து உயிரிழப்பு! பரபரப்பான வீடியோ இதோ..

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…

2 hours ago

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

4 hours ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

4 hours ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

2 days ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

2 days ago