வெற்றி அடைந்து வரும் தங்களது தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் நூறாவது படத்தில் விஜய் நடிப்பார் என ஆர்பி சவுத்ரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் நிறுவனம் தான் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் இயக்குனர் ஆர்பி சவுத்ரிஆவார். இவர்களது தயாரிப்பில் இதுவரை 90 படங்கள் வரை தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்களது படத்தில் கிட்டத்தட்ட ஆறு படத்தில் நடிகர் விஜய் அவர்கள் நடித்துள்ளார்கள். இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள அந்நிறுவனத்தின் தலைவர் சவுத்ரி அவர்கள், 90 வது படமாக உருவாகியுள்ள காலத்தில் சிந்திப்போம் படத்தில் எனது மகனும் நடிகர் ஜீவாவும் அருள்நிதியும் இணைந்து நடித்துள்ளனர். சூப்பர் குட் நிறுவனம் புதிய இயக்குனர்களை கொண்டுதான் எப்பொழுதும் அதிக படங்களை தயாரித்து வருவதால் தற்பொழுது ராஜசேகரை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
ஆண்டுக்கு நான்கு படங்கள் வரைய தயாரித்துக் கொண்டிருந்த நாங்கள் இனி இரண்டு படங்கள் தயாரிக்கலாம் என முடிவெடுத்துள்ளோம். ஏனென்றால் தற்பொழுது படங்கள் தயாரிப்பதை விட வெளியிடுவதும் நடிகர்களுக்கு கொடுக்கக்கூடிய சம்பளமும் அதிகரித்துவிட்டது. மேலும் விஜய் தான் எங்கள் ஹீரோ அவருக்கு இதுவரை எங்கள் நிறுவனத்தின் மூலம் ஆறு சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்து உள்ளோம். விரைவில் நாங்கள் நூறாவது படத்தை எட்டுவோம் அப்பொழுது அதை பிரமாண்டமாக தயாரிக்க உள்ளோம். அந்த படத்தில் விஜய் நடிப்பார் என தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் ஒரு வேளை அதற்கு முன்பதாக கூட அவர் எங்கள் நிறுவனத்தில் மேலும் ஒரு படம் நடித்து விடலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…