விசா ரத்து விவகாரம்.! டிரம்பின் நிர்வாகத்தின் மீது 17 மாநிலங்கள் வழக்கு.!

Published by
murugan

17 அமெரிக்க மாநிலங்களும், கொலம்பியா மாவட்டமும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது.

அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் 34 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1.30 லட்சத்துக்கும் அதிகமானார் உயிரிழந்து உள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் கல்லூரிககள், பள்ளிகள் திறக்கமுடியாத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பல பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை தொடங்கி உள்ளன.

இதைத்தொடர்ந்து, அமெரிக்காவில் ஆன்லைன் வகுப்புக்கு மாறும் பல்கலைக் கழகங்களில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படும் என டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு அமெரிக்காவில் படித்து வருகிற வெளிநாட்டு மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த அறிவிப்பு தொடர்பாக பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில், 17 அமெரிக்க மாநிலங்களும், கொலம்பியா மாவட்டமும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது. மேலும், யேல், டீபால், சிகாகோ பல்கலைக்கழகம், டஃப்ட்ஸ், ரட்ஜர்ஸ் மற்றும் இல்லினாய்ஸ், மேரிலாந்து, மாசசூசெட்ஸ், மினசோட்டா மற்றும் விஸ்கான்சின் மாநில பல்கலைக்கழகங்கள் உட்பட சுமார் 40 உயர்கல்வி நிறுவனங்கள் இந்த வழக்குக்கு ஆதரவாக அறிவிப்புகளை தாக்கல் செய்துள்ளனர்.

சமீபத்தில், டிரம்ப் நிர்வாக விசா முடிவுக்கு எதிராக தற்காலிக தடை உத்தரவு அல்லது நிரந்தர தடை விதிக்க கோரி  ஹார்வர்டு பல்கலைக்கழகமும், எம்.ஐ.டி. என்று அழைக்கப்படுகிற மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவனமும் பாஸ்டன் மாவட்ட கோர்ட்டில்  வழக்கு தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

1 hour ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

2 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

3 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

3 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

4 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

5 hours ago