விஷால் நடித்து முடித்துள்ள ‘சக்ரா’ படத்தின் டிரைலர் வரும் ஜூன் 27ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷால் அவர்கள் தற்போது நடித்து வரும் திரைப்படத்தில் ஒன்று துப்பறிவாளன் 2. சமீபத்தில் இயக்குநர் மிஷ்கின் மற்றும் விஷாலுக்கும் இடையில் நிலவி வந்த பிரச்சினைகளால் மிஷ்கின் இதிலிருந்து விலகினார். அதனையடுத்து அந்த படத்தை விஷால் அவர்களே இயக்கி, தயாரித்து நடிக்கிறார். மேலும் மருது படத்தை இயக்கிய எம். முத்தையா அவர்கள் இயக்கும் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். மேலும் இவர் “சக்ரா” என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கிற்கு முன்பு முடிவடைந்தது.
இந்த படத்தை எம். எஸ். ஆனந்த் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்தில் ரெஜினா கெசன்ட்ரா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் கதாநாயகியாக நடிக்கின்றனர். மேலும் அவர்களுடன் ரோபோ சங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரும், டிரைலரும் ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது. சமீபத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்கியுள்ளதாக அறிவித்திருந்தனர்.அண்மையில் இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு டிரைலர் புரோமோவை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் சக்ரா படத்தின் டிரைலரை வரும் ஜூன் 27ம் தேதி சனிக்கிழமை அன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…