காதலியை கரம்பிடித்த விஷ்ணு விஷால்..!!

Published by
பால முருகன்

நடிகர் விஷ்ணு விஷாலிற்கும் அவரது காதலி மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவிற்க்கும் ஹைதராபாத்தில் திருமணம் முடிந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இவருக்கும் நடிகர் கே.நட்ராஜின் மகளான ரஜினி நடராஜ் என்பவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருணம் நடந்தது. திருமணம் ஆன சில ஆண்டுகளில் சில காரணங்களால் விஷ்ணு விஷால் விவாகரத்து செய்தார்.

இதனை தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை காதலிப்பதாக விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்தார். கடந்த ஆண்டு ஜூவாலா கட்டாவின் பிறந்த நாள் அன்று இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. மேலும் நிச்சியதார்த்தை தொடர்ந்து நேற்று ஹைதராபாத்தில் வைத்து இவர்கள் திருமணம் நடைபெற்றது. விஷ்ணு விஷால் திருமணத்திற்கு அவரது ரசிகர்கள் பல சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில் அவர் கூறியது ” நாங்கள் பதிவு திருமணம் செய்து கொண்டோம். ஆனால் நாங்கள் ஹால்டி மற்றும் மெஹெண்டி போன்ற பாரம்பரிய விழாக்களை இரண்டு நாட்களாக திருமண நாளிலும் அதற்கு முந்தைய நாளிலும் வைத்திருந்தோம். எங்களுக்கு நெருக்கமான குடும்பத்தினர் மற்றும் ஒரு சில நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாங்கள் பிரமாண்டமாக திருமணத்தை கொண்டாடவில்லை நாம் பொறுப்பாக இருக்க வேண்டும், தற்போது நம் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை புறக்கணிக்க முடியாது” என்றும் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர் எதற்காக எப்படி நடத்தப்பட்டது? இந்திய ராணுவம் விளக்கம்!

டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…

3 hours ago

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

4 hours ago

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

6 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

6 hours ago