Vivek Ramaswamy [File Image]
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கு அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு செய்வது சற்று வித்தியாசமாக இருக்கும். அங்கு உள்ள முக்கிய கட்சியானஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி மட்டுமே உள்ளது. இந்த இரு கட்சிகள் சார்பில் போட்டியிடும் அதிபர் வேட்பாளர்கள் தங்களது விருப்பத்தை தெரிவிப்பார்கள். அதிபர் தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உட்க்கட்சித் தேர்தல் நடத்தப்படும். அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள்தான் அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
இதனால் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போது அதிபராக உள்ள ஜோபேடன் அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது உறுதியாகிவிட்டது. அதே நேரத்தில் எதிர்க்கட்சியான குடியரசுத் தலைவர் சார்பில் பலர் அதிபர் வேட்பாளருக்கான விருப்பங்களை தெரிவித்தன. அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியும் விருப்பம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எனக்கு வேறு வழியில்லை, டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதால் விலகுவதாகவும், அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாகவும், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். இந்திய அமெரிக்கர்கள் மத்தியில் விவேக் ராமசாமிக்கு ஆதரவு அதிகமாகவே இருந்தது” என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ண ஜென்ம பூமி வழக்கு..அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை..!
யார் இந்த விவேக் ராமசாமி ?
விவேக் ராமசாமி ஒரு கோடீஸ்வர தொழிலதிபர் மற்றும் பயோடெக் நிறுவனத்தின் தலைவர், ராமசாமியின் பெற்றோர் இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்தவர்கள், அவர்கள் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்கள், ராமசாமி அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் பிறந்தார்.
கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பிறகு விவேக் ராமசாமி குடியரசுக் கட்சி வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தார். சமீபத்தில், விவேக் ராமசாமி தனது ஒரு பிரச்சாரத்தால் அவருக்கான செல்வாக்கை அதிகரித்தது. நாட்டின் அதிபராக தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால், சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவர்களின் நாட்டுக்கு திருப்பி அனுப்புவேன் என்று கூறியிருந்தார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் எவருக்கும் எந்த விதமான மெத்தனமும் காட்டப்பட மாட்டாது என்றும், அந்த புலம்பெயர்ந்தோரை அவர்களின் நாட்டிற்கு அனுப்புவது மட்டுமல்லாமல், அவர்களின் குழந்தைகளின் குடியுரிமையையும் ரத்து செய்வோம், அமெரிக்காவுக்கே முன்னுரிமை தருவேன் என கூறினார்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விவேக் ராமசாமி விலகியதையடுத்து இப்போது இந்த போட்டியில் மூன்று பேர் மட்டுமே முன்னிலையில் உள்ளனர். இதில் டொனால்ட் டிரம்ப் தவிர நிக்கி ஹேலி, ரான் டி சாண்டிஸ் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…