அமெரிக்கத் தேர்தல் 2020: உங்கள் வாக்குதான் உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் என்று கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அமெரிக்காவில் தேர்தல் தொடங்கும் முன்னே, அதிபர் வேட்பாளர்களுக்கிடையே நேருக்கு நேர் விவாதங்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே விவாதம் நடைபெற்று முடிந்த நிலையில், அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ், மைக் பென்ஸ் நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது.
இதில், ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் பேசுகையில், கொரோனாவை வெள்ளை மாளிகை எதிர்கொண்ட விதம் சரி இல்லை. கொரேனாவிற்கு 70 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் டிரம்ப் அரசின் தோல்வியை மக்கள் பார்த்துக்கொண்டுள்ளனர் என்றும் டிரம்ப் அரசிடம் கொரோனாவை எதிர்கொள்ள சரியான திட்டமில்லை என்று பேசினார்.
இதனையடுத்து, கமலா ஹாரிஸ் அரிசோனா மக்களிடம் “உங்கள் வாக்குதான் உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் “ அதன்படி, வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும், ஆகஸ்ட் மாதத்தில் பரிந்துரைக்கப்பட்ட மாநாட்டிற்குப் பிறகு முதல் முறையாக ஜோ பைடனும் ஹாரிஸும் நேற்று ஒன்றாக பிரச்சாரம் செய்தனர்.
மேலும், முக்கியமான புதிய போர்க்களத்தை முன்னிலைப்படுத்த அரிசோனாவைத் தேர்ந்தெடுத்தனர். அங்கு, ஜனநாயக செனட் வேட்பாளர் மார்க் கெல்லிக்கு வாக்களிக்க அரிசோனா மக்களை ஹாரிஸ் வலியுறுத்தினார்.
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…