ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் சமையல் வேலைகளை செய்தும், உடற்பயிற்சி செய்தும், புதிய முறைகளை படித்து கையாளுவதும் போன்ற வீடியோக்களையும், பழைய புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் சிம்பு வீட்டை சுற்றி ஓடி ஜாகிங் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. இந்த நிலையில் தற்போது சிம்பு சமையல் செய்ய விடிவி கணேஷ் அவரிடம் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அதில் வர போற பொண்ணுக்கு வேலையே இல்லாமா பண்ணிடுவீங்க போல என்று கணேஷ் கேள்வி கேட்க, அதற்கு சிம்பு அந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டு வேலை செய்யவா வராங்க, அந்த பொண்ணு வேலைகாரினு நினைச்சீங்களா, அது எல்லாம் உங்கள் காலம், பொண்ணு வாழ்க்கை துணையாக இருக்க வராங்க, முதலில் துணையை எப்படி பாத்துகணும் என்று தெரிந்து கொள்ளுங்கள். வர போற பொண்ணை வேலைக்காரி மாதிரி பாக்குறதுக்கு நான் உங்கள மாதிரி ஆள் கிடையாது என்று கூறியுள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தற்போது இந்த வீடியோவால் சிம்புவின் இந்த கருத்து பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரை பாராட்டி பல நெட்டிசன்களும் , பிரபலங்களும் கமென்ட் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது நடிகையும், பிக்பாஸ் போட்டியாளரான பிந்து மாதவி சிம்புவை புகழ்ந்து டுவிட் ஒன்னற பதிவிட்டுள்ளார். அதில் சரியான அணுகுமுறை சிம்பு என்றும், சிம்புவின் மனைவியை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். பிந்து மாதவியின் இந்த பதிவை சிம்பு ரசிகர்கள் வைரலாக்கி வருவதோடு நீங்களே அவரை திருமணம் செய்து கொள்லாமே என்றும் கமென்ட் செய்து வருகின்றனர். ஒரே வீடியோவால் சிம்புவின் இமேஜ் எங்கயோ போய் விட்டது. நாங்கள் சிம்பு ரசிகர்களாக இருப்பதில் மகிழ்ச்சி என்ற கர்வத்திலும் ஒரு சில ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…
கடலூர் : மாவட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய ரயில் விபத்தில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…