நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் வார்னர் , பிஞ்ச்!

உலகக்கோப்பையில் நேற்று நடந்த 32-வது லீக் போட்டியில் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா அணிகள் விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச முடிவு செய்தது.முதலில் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 285 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 44.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 221 ரன்கள் அடித்து 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இந்நிலையில் இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் ,ஆரோன் பிஞ்ச் இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவரும் அதிரடியாக விளையாடினர்.இப்போட்டியில் டேவிட் வார்னர் 61 பந்தில் 53 ரன்கள் எடுத்தார்.இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இதற்கு முந்திய போட்டியில் 447 ரன்கள் அடுத்து இருந்தார்.இப்போட்டியில் 53 ரன்கள் எடுத்து 500 ரன்கள் கடந்து உள்ளார்.மேலும் இரண்டாவது இடத்தில் 496 – ஆரோன் பிஞ்ச் உள்ளார்.
500 – டேவிட் வார்னர்
496 – ஆரோன் பிஞ்ச்
476 – ஷாகிப் அல் ஹசன்
424 – ஜோ ரூட்
373 – கேன் வில்லியம்சன்
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025