தண்ணீரினால் ஏற்றப்படும் குபேர ஜலதீபத்தின் சிறப்புகள் பற்றி தெரியுமா?

Published by
மணிகண்டன்
  • நீரினால் தீபம் ஏற்றுவது ஜலதீபம் என கூறப்டுகிறது.
  • இந்த ஜலதீபமானது குபேரருக்கு மிகவும் உகந்தது. அதனால் குபேர ஜலதீபம் என அழைக்கப்படுகிறது.

ஜலம் என்றால் தண்ணீர் என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். அதனால் ஜலதீபம் என்பது தண்ணீரில் ஏற்றி வைக்கப்படும் தீபமே. தண்ணீரில் தீபம் ஏற்றி வைப்பது சுலபமான காரியமல்ல என நமக்கு தெரியும். அதனை சில வழிமுறைகளை கொண்டு நிறைவேற்றலாம். இந்த ஜலதீபமானது குபேரருக்கு மிகவும் உகந்ததாகும். அதனாலே இது குபேர ஜலதீபம் என அழைக்கப்படுகிறது.

ஒரு நல்ல தட்டை எடுத்து கொண்டு அதனை மலர்களால் அலங்கரித்து விட்டு, பின்னர், ஒரு கண்ணாடி டம்ளரில் பாதி அளவு தண்ணீர் வைத்து கொள்ள வேண்டும். அதன் மேல் நல்லெண்ணெய் அல்லது விளக்கு ஏற்றுவதற்கு உகந்த எண்ணெய் ஊற்றி வைக்க வேண்டும். தண்ணீரும் எண்ணெயும் ஒன்று சேராது. அதனால் எண்ணெய் மேலே இருக்கும். பின்னர், எண்ணெயில் ஊற வைத்த விளக்கு திரியை அதன் மேல் வைக்கவேண்டும்.

தண்ணீரில் திரி மூழ்காமல் இருக்க வெற்றிலை வைத்து அதன்மீது திரியை வைக்கலாம். இது திரியை உள்ளே மூழ்கி தீபம் அணைவதை தடுக்கும்.

இந்த குபேர ஜல தீபத்தை வியாழக்கிழமை ஏற்றவேண்டும். வியாழக்கிழமை குபேரனுக்கு மிகவும் உகந்த நாள். அன்றைய நாள் மாலை இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, வெள்ளி, சனி  என மூன்று நாட்கள் தொடர்ந்து எரியவிட வேண்டும். அதனை அணையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு நீங்கள் தொடர்ந்து பூஜை செய்யும் போது, அந்த ஜலதீபத்தின் ஒளியானது உங்கள் வீட்டில் நேர்மறையான ஆற்றலை கொடுக்கும். எதிர்மறையான ஆற்றல்களை தகர்த்துவிடும். வீட்டில் அமைதி நிலவும். உங்கள் மன உளைச்சலை கட்டுப்படுத்தி குறைந்திருப்பதை நீங்களே உணர்வீர்கள். இந்த பூஜையை முழுமனதுடன் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Published by
மணிகண்டன்

Recent Posts

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம்.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…

32 minutes ago

UAE கோல்டன் விசா: இந்தியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் குடும்பத்துடன் வாழ அரிய வாய்ப்பு!

எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…

1 hour ago

கடலூர் விபத்து : “மக்கள் கொடுத்த அழுத்தத்தால் கேட்டை கீப்பர் திறந்திருக்கிறார்”..அன்பழகன் பேச்சு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…

2 hours ago

கடலூர் விபத்து : “கேட் திறந்து தான் இருந்தது” பள்ளி வேன் ஓட்டுநர் கொடுத்த வாக்குமூலம்!

கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…

3 hours ago

கடலூர் ரயில் விபத்து : அக்கா, தம்பி உயிரிழந்த பரிதாபம்!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…

3 hours ago

மீத்தேன் கண்காணிப்பு செயற்கைக் கோள் திடீர் மாயம்! நடந்தது என்ன?

பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…

4 hours ago