நேற்று கமல் பேசிய வார்த்தையில் பாலா ஒரே நாளில் நல்லவர் ஆகி விட்டார் போல, இன்று நான் கோபப்பட மாட்டேன் என கேமரா முன்பு கூறுகிறார்.
90 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டது. இன்னும் 10 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பப்பட உள்ள இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். அதிலும் இறுதியாக பைனல் சுற்றுக்கு செல்லக்கூடிய வாய்ப்பை கொடுக்கக்கூடிய டிக்கெட் டூ ஃபினலே டாஸ்க் இந்த வாரம் நடைபெறுகிறது. இந்த வாரம் முழுவதும் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் கலந்துகொண்டு அதிக மதிப்பெண் பெற கூடிய போட்டியாளர்களில் ஒருவர் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்வார்.
அதில் நேற்று பாலா ஒரு விளையாட்டில் முதல் இடத்தைப் பெற்றிருந்தார். இந்நிலையில் இன்று கொடுக்கப்பட்டுள்ள விளையாட்டில் ஆரி விளையாடுவதற்கு இடையூறாக பாலா சில காரியங்களைச் செய்தார். அதற்கு ஆரி பாலாவைப் பார்த்து நீ ஆம்பள பையன் தானே ஓடலாம் அல்லவா எனக் கூறியிருந்தார். எனவே இன்று கேமரா முன்பு வந்து ஆரி இவ்வாறு செய்வது நியாயமானது தானா என கூறும் பாலா சரி இனி கோபப்பட மாட்டேன் என கூறுகிறார். இதோ அந்த வீடியோ,
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியாவின் AI-171 விமானம் (போயிங் 787-8…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) சட்டமன்றக் குழு கொறடாவாக உள்ள சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை மாற்ற…
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…