வாட்ஸ்அப் நிறுவனம் குரூப் கால் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தகவல் பரிமாற்றத்திற்காக வாட்ஸ்அப் செயலியானது இன்றியமையாத தேவையாகி விட்டது. அதை மேலும் மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில்,வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,இனி பயனர்கள் ஒரே நேரத்தில் பலருடன் கான்பிரன்ஸ் கால் பேச முடியும்.குறைந்த பட்சம் 5 பேர் வரை ஒரே நேரத்தில் வாட்ஸ் அப் வீடியோ அல்லது ஆடியோ கால் மூலம் பேசமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அம்சம் ஒரு அழைப்பு தகவல் திரையையும் கொண்டு வருகிறது.அதாவது அழைப்பில் யார் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க அனுமதிக்கிறது.
புதிய அம்சம்:
இதற்கு முன்னர்,குரூப் அழைப்பு அறிவிப்பைத் தவறவிட்ட பயனர்கள் அழைப்பாளரை மீண்டும் சேர்க்குமாறு கேட்க வேண்டும்.அது மிகவும் சிரமமாக இருந்தது.ஏனெனில்,தாமதமாக இணைவதால் அழைப்பில் மற்றவர்கள் முன்னதாக பேசிய உரையாடலை பெரும்பாலும் தவறவிடும்படி இருந்தது.
ஆனால்,இந்த புதிய அம்சம் பயனர்கள் குரூப் அழைப்பில் எப்போது சேர விரும்புகிறீர்கள் என்பதை அவர்களிடமே தீர்மானிக்க விட்டுவிடுகிறது. மேலும்,பயனர்கள் ஏற்கனவே இருக்கும் அழைப்பிலிருந்து விலகி,பின்னர் மீண்டும் சேர அனுமதிக்கிறது.
இத்தகைய புதிய அம்சம் வாட்ஸ்அப்பின் பீட்டா வெர்ஷனில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பில் ஐ-போன்களிலும் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
IMO, Google Duo போன்ற செயலிகளில் குரூப் வீடியோ அல்லது ஆடியோ கால் செய்வது போன்று இனி வாட்ஸ் அப்பிலும் செய்ய முடியும். அதன்படி,அழைப்பின் போது “Tap to join” மூலம் அதில் இணைந்து கொள்ளலாம்.வீடியோ அழைப்பை தவிர்க்க ‘ignore’ வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
மார்க் ஜுகர்பெர்க்:
மேலும்,இது குறித்து வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் கூறுகையில் :”வாட்ஸ்அப்பில் குரூப் அழைப்புகள் வசதி இன்று தொடங்குகிறது. இப்போது நீங்கள் குரூப் அழைப்பில் சேர்க்கப்பட்டால் அல்லது அதை தவறவிட்டால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சேரலாம்”,என்று தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…