அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் – லாஸ்லியா மரியநேசன்!

உலகநாயகன் கமலஹாசன் அவர்களால் பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மாறியநேசன். நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் தனது இணையதள பக்கங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார்.
இந்நிலையில், தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதில், பொய்கள் நிறைந்த இந்த உலகத்தில் நமக்கும் சில தேடல்கள் உண்டு. ஆனால், நாம் இத்தனை பேர் மத்தியில் இருந்தாலும் நமது மனசாட்சி மட்டுமே நம்முடன் இருக்கும். எதிர்மறையான எண்ணங்களும் தவறான நீதியும் கொடுக்கக் கூடிய இந்த உலகத்திலும், மக்கள் மகிழ்ச்சியாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,