இன்று உலகக் கருவியல் தினம்….!

Published by
Edison

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 25 ஆம் தேதி ‘உலகக் கருவியல் தினம்’ கொண்டாடப்படுகிறது. 

சில வருடங்களுக்கு முன்னதாக உலகம் முழுவதும் குழந்தைப் பேறுக்காக பல பெற்றோர்கள்  ஏங்கிக்கொண்டிருந்தனர்.இந்த நிலையில்தான், 1978 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி இங்கிலாந்தில் லுயி ப்ரௌன் என்ற உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறந்தார்.இந்த சந்தோசமான செய்தி, உலகம் முழுவதும் குழந்தைப் பேறு இல்லாத பெற்றோர்களுக்கு ஒரு நம்பிக்கை அளித்தது.

இதனாரன்மாக,முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறந்த தினமான ஜூலை 25 ஆம் தேதி “உலகக் கருவியல் தினமாக” ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.இந்த முதல் சோதனைக்குழாய் குழந்தையின் தந்தை எட்வர்ட்ஸ் என்பவர் ஆவார்.இதற்காக,2010 ஆம் ஆண்டு எட்வர்ட்ஸ் நோபல் பரிசை பெற்றார்.

செயற்கை முறை கருத்தரித்தல்:

இயற்கையான முறையில் கருத்தரிப்பு நிகழ்ந்து குழந்தை பெற்றுக் கொள்ளமுடியாத தம்பதிகள், செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள உள்ள உதவும் ஒரு முக்கிய வாய்ப்பாக ஐ.வி.எஃப் (In Vitro Fertilisation) எனப்படும் செயற்கை முறை கருத்தரித்தல் உள்ளது.

சோதனைக் குழாய் குழந்தை:

ஐ.வி.எஃப் மருத்துவ ஆய்வகங்களில்,கருவுற விரும்பும் பெண்ணின் கருமுட்டை மற்றும் ஆணின் விந்தணுக்கள் தனித்தனியே பெறப்பட்டு, பின்னர் அவற்றை இணைத்து,பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்துகின்றனர்.அந்தக் கரு வளர்ந்து, “டெஸ்ட் டியூப் பேபி என்று அழைக்கப்படும் “சோதனைக் குழாய் குழந்தையாக” பிறக்கிறது.

கவனம் தேவை:

நாடு முழுவதும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பல இருப்பினும் செயற்கையாக கருவூட்ட சிகிச்சை செய்துகொள்ள விரும்பும் தம்பதிகள் சரியான மருத்துவ நிபுணர்களைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகியுள்ளது.

ஆரோக்கியமான கருத்தரிப்பு:

ஆண்கள் புகைப்பிடித்தல், மது அருந்துதலைத் தவிர்க்க வேண்டும்.சரியான வேளையில் சரியான அளவில் உணவு எடுத்துக்கொள்வது இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.சரியான தூக்கமின்மை ஆண், பெண் இருவரிடமுமே ஹார்மோன் பாதிப்பை ஏற்படுத்தும்.எனவே, எட்டு மணி நேர தூக்கம் அவசியம்.மேலும்,எந்த மருந்தை எடுத்துக் கொண்டாலும் மருத்துவரின் ஆலோசனை அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

13 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

16 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

19 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

20 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

22 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

22 hours ago