உலகின் முதல் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) 1992 ஆம் ஆண்டு வோடபோன் ஊழியரால் “மெர்ரி கிறிஸ்மஸ்” என்று அனுப்பப்பட்டது. இந்த குறுஞ்செய்தி ரூ.1 கோடிக்கு ஏலம் போனது.
தற்போது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு செயலிகள் காரணமாக குறுந்தகவல் சேவையான எஸ்எம்எஸ் கிட்டத்தட்ட பலருக்கும் மறந்துவிட்டது. ஆனால், உலகின் முதல் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு 30 ஆண்டுகளுக்கு முன்பு 1992 ஆம் ஆண்டு, வோடஃபோனின் பிரிட்டிஷ் ஊழியர் ஒருவரால் அனுப்பப்பட்டது.
அந்த ஊழியரின் பெயர் நீல் பாப்வொர்த். நீல் ஒரு புரோகிராமர் டிசம்பர் 3, 1992-ஆம் ஆண்டு அன்று அவர் தனது சக ஊழியர் ரிச்சர்ட் ஜார்விஸுக்கு ஒரு செய்தியை அனுப்பினார். இந்த முதல் குறுஞ்செய்தியில் “மெர்ரி கிறிஸ்மஸ்” என்ற 14 எழுத்துக்கள் இருந்தன. நீல் தனது ஆர்பிட்டல் 901 மொபைல் (Orbital 901 Mobile Handset) கைபேசியில் ரிச்சர்ட் ஜார்விஸுக்கு அந்த எஸ்எம்எஸ் அனுப்பினார்.
2017ல் ஒருமுறை இதைப் பற்றி பேசிய நீல், 1992ல் இந்த எஸ்எம்எஸ் அனுப்பிய போது இந்த எஸ்எம்எஸ் இவ்வளவு பிரபலமாகும் என்று தனக்குத் தெரியாது என்று கூறியிருந்தார். உலகின் முதல் குறுஞ்செய்தியை மொபைல் கைபேசியில் அனுப்பியதாக அவர் தனது குழந்தைகளிடம் கூறியிருந்தார். 1992ம் ஆண்டு முதல் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டது. 1995 வரை சராசரியாக 0.4 சதவீதம் பேர் மட்டுமே ஒவ்வொரு மாதமும் எஸ்எம்எஸ் அனுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் இந்த “மெர்ரி கிறிஸ்மஸ்” குறுஞ்செய்தியின் டிஜிட்டல் நகலை ஏலம் விட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற ஏலத்தில் 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3 -ஆம் தேதி அனுப்ப்பட்ட “மெர்ரி கிறிஸ்மஸ்” என்ற குறுஞ்செய்தி ரூ.1 கோடிக்கு ஏலம் போனது. ஏலத்தில் கிடைக்கும் வருமானம் UNHCR-UN Refugee Agencyக்கு வழங்கப்படும் என்று வோடபோன் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…