யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே. ஜி. எஃப் 2 ல் ரஜினியின் காலா படத்தில் நடித்த ஈஸ்வரி ராவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2018ல் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘கே. ஜி. எஃப் சாப்டர் 1’. யாஷ் தற்போது கே. ஜி. எஃப் சாப்டர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் பிரசாந்த் நீல் இயக்குகிறார்.இந்த ஆண்டு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தப் படத்தை அக்டோபர் 23ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் யாஷூடன் சஞ்சய் தத், ரவீனா டண்டன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் சஞ்சய் தத்தின் லுக் போஸ்ட்ர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
தற்போது கொரோனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 25நாட்கள் படப்பிடிப்பு இருப்பதாகவும், அதில் 2 சண்டை காட்சிகளை படமாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை தவிர்த்து இசை பணிகள் உட்பட அனைத்து இறுதிக்கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்பட்டது சமீபத்தில் அதீராவாக நடிக்கும் சஞ்சய் தத்தின் போஸ்ட்ர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் காலா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்ற ஈஸ்வரி ராவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதும், அவர் திரும்பி வந்ததும் மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…