முக அழகை பராமரிக்க மஞ்சள் … உபயோகிக்கும் முறை அறியலாம் வாருங்கள்..!

Published by
Rebekal

பெண்கள் எல்லாருமே முக அழகை பராமரிக்க வேண்டும் என விரும்புவது வழக்கம். இதற்காக செயற்கையான க்ரீம்களை உபயோகிப்பது மூலமாக உடனடியாக முக பொலிவு கிடைத்தாலும், அந்த முகப்பொலிவு விரைவில் மங்கி விடும். ஆனால் இயற்கையான முறையில் மெல்ல மெல்ல கிடைக்கக்கூடிய முக அழகு பல நாட்களுக்கு நீடித்து நிற்கும்.

கால சூழ்நிலை மற்றும் வயது காரணமாக நமது முகத்தில் காணப்படக்கூடிய வறட்சி, சுருக்கங்கள், பருக்கள், கரும்புள்ளிகள் என அனைத்தையும் நீக்குவதற்கு விலை உயர்ந்த மாஸ்க்குகளை நாம் முகத்தில் போட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வீட்டிலேயே இயற்கையான பொருட்களை வைத்து தயாரிக்கலாம். இன்று மஞ்சளை வைத்து எப்படி முக அழகை பராமரிப்பது என்று 3 வழிமுறைகளில் பார்க்கலாம்.

மஞ்சள், தேன் மாஸ்க்

முதலில் முகத்தை கழுவிவிட்டு இந்த மஞ்சள் தேன் மாஸ்க்கை முகத்தில் போடும் பொழுது முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு உதவுவதுடன், கரும்புள்ளிகளை நீக்குவதற்கும் இது உதவுகிறது. இந்த மாஸ்க்கை எப்படி தயாரிக்க வேண்டும் என்றால், ஒரு கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் மஞ்சள், அரை டீஸ்பூன் தேன் எடுத்துக் கொண்டு இரண்டையும் நன்றாக கலக்கவேண்டும்.

அதன் பின் இதனுடன் ரோஸ் வாட்டர் சிறிதளவு கலந்து, இந்த மாஸ்க்கை முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் சுத்தம் செய்யும் பொழுது அட்டகாசமான முகப்பொலிவு கிடைக்கும். இதை வாரம் இரண்டு முறை பயன்படுத்தலாம்.

மஞ்சள், தயிர் ஸ்க்ரப்

மஞ்சளில் இருந்து தயாரிக்கப்பட கூடிய ஸ்க்ரப் சருமத்தை சுத்தப்படுத்துவதோடு, பளபளப்பாக மாற்றவும் உதவுகிறது. மஞ்சள் தேன் மாஸ்க் போட்ட பின்பு இதை வைத்து ஸ்க்ரப் செய்ய வேண்டும். இதைத் தயாரிப்பதற்கு முதலில் அரை டீஸ்பூன் மஞ்சள் மற்றும் சர்க்கரை  எடுத்துக்கொள்ளவேண்டும். இதனுடன் தயிர் ஒரு டீ ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். பின்பு இதை முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பிறகு, ஸ்க்ரப் செய்து விட்டு முகத்தை குளிர்ந்த நீரால் சுத்தம் செய்ய வேண்டும். இதிலுள்ள தயிர் சருமத்திற்கு குளிர்ச்சி அளிப்பதுடன் சூரிய ஒளியின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.

மஞ்சள், சந்தனம், பால்

மஞ்சள் மற்றும் சந்தனத்தை வைத்து ஒரு பேஸ்ட் போல தயாரிக்க வேண்டும். இதற்கு கடைகளில் கிடைக்க கூடிய சந்தன பவுடரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சம அளவு மஞ்சள் மற்றும் பால் கலந்து பேஸ்ட் போல தயாரிக்க வேண்டும். இதை முகத்தில் தடவி இரண்டு மூன்று நிமிடங்கள் மசாஜ் செய்து விட்டு 10 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். В разделе Лайв обычно от 20 до 50 событий. Роспись на матч в прямом эфире не отличается от подборки котировок в прематче. мостбет Если игроки ищут что-то более экзотическое, обратите внимание на киберспорт, фэнтези-спорт или виртуальный спорт.

இவ்வாறு செய்து வரும் பொழுது முகத்தில் நாம் விரும்பிய பொலிவு கிடைக்கும். அதுபோல இரவு தூங்குவதற்கு முன்பாக மஞ்சள் கலந்து ஒரு கிளாஸ் பால் தினமும் குடித்து வரும் பொழுதும் இது நமது உடலுக்கு நல்ல ஆண்டிபயாடிக்காக செயல்படும். மேலும் காய்ச்சல், சளி போன்ற நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கவும் இது உதவுகிறது.

Published by
Rebekal

Recent Posts

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

59 minutes ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

2 hours ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago