இன்றைய (20.01.2022) நாளின் ராசி பலன்கள்..!

Published by
Sharmi

மேஷம் : இன்றைய தினம் உங்களுக்கு பதற்றமான தினமாக அமையும். முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். உத்தியோகத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண செலவு அதிகமாக ஏற்படும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்வீர்கள். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

ரிஷபம் : இன்று நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுவது நன்மை அளிக்கும். உத்தியோகத்தில் கடினமாக உழைத்தால் வெற்றி கிட்டும். உங்கள் துணையிடம் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். தோள்களில் வலி ஏற்படலாம்.

மிதுனம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உத்தியோக வேலையில் நற்பெயர் கிட்டும். காதலுக்கு உகந்த நாள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம் :இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உத்தியோகத்தில் சரியான நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண செலவு அதிகமாக இருக்கும். செரிமான கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.

சிம்மம் : இன்றைய தினம் தன்னம்பிக்கையும் உறுதியும் இருந்தால் உற்சாகமாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் கவனம் தேவை. உங்கள் துணையிடம் அன்பாக பழகுவீர்கள். பண வரவு குறைவாக இருக்கும். முதுகு வலி ஏற்படலாம்.

கன்னி : இன்றைய நாள் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. சற்று பொறுமை இழந்து காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் அதிக பணிகள் காணப்படும். மனைவியிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். இன்று பணவரவு குறைவாக இருக்கும். கண்களில் எரிச்சல் ஏற்படும்.

துலாம் : இன்று நீங்கள் சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் சரியான நேரத்தில் பணிகளை முடிக்க இயலும். காதலுக்கு உகந்த நாள். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம் : இன்று உங்களுக்கு வளர்ச்சியான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் சிறப்பாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக பழகுங்கள். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு : இன்றைய நாள் பொறுமையுடன் இருக்க வேண்டும். அவசர முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் சரியான நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று செலவு அதிகமாக இருக்கும். தூக்கமின்மை மற்றும் தலைவலி ஏற்படலாம்.

மகரம் : இன்று உங்களது தன்னம்பிக்கை சற்று குறைவாக இருக்கும். உத்தியோக வேலையில் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. காதலுக்கு உகந்த நாள். பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை. தோல் தொடர்பான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உத்தியோகத்தில் சிறப்பாக இருக்கும். காதலுக்கு உகந்த நாள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம் : இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். உத்தியோகத்தில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Recent Posts

மீத்தேன் கண்காணிப்பு செயற்கைக் கோள் திடீர் மாயம்! நடந்தது என்ன?

மீத்தேன் கண்காணிப்பு செயற்கைக் கோள் திடீர் மாயம்! நடந்தது என்ன?

பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…

33 minutes ago

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து! காரணம் இது தான் ரயில்வே துறை விளக்கம்!

கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…

2 hours ago

கடலூர் விபத்து : ரயில்வே கேட் அருகே நின்றிருந்தவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…

2 hours ago

நாளை முழுவதும் ஆட்டோ,பேருந்துகள் ஓடாது ஸ்ட்ரைக்! என்ன காரணம்?

சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…

3 hours ago

சென்னையில் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு! ஆவணங்களை ரெடியாக வைத்திருக்க அறிவுறுத்தல்!

சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…

3 hours ago

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து….3 பேர் பலி!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…

3 hours ago