இன்றைய (20.11.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம் :  இன்று ஆன்மீக சிந்தனையில் அதிகம் ஈடுபடுவீர்கள்.  உங்களது உத்தியோக வேலை சிறப்பாக அமையும். உங்கள் மனைவியிடம் சற்று அனுசரித்து பேசுங்கள். மிதமான பணவரவு ஏற்படும். கண்களுக்கு சிகிச்சை செய்து கொள்ளுங்கள்.

ரிஷபம் : இன்றைய தினம் சவால்கள் நிறைந்த தினமாக அமையும். உத்தியோக பணிகளில் சற்று கவனம் தேவை. மனதில் சற்று குழப்பங்கள் ஏற்படலாம். பணவரவு சற்று குறைவாக இருந்தாலும் அதனை சரியாக சமாளிக்க வேண்டும். தொடை சம்மந்தப்பட்ட வலி ஏற்படலாம்.

மிதுனம் : இது உங்களுக்கு மந்தமான நாளாக இருந்தாலும் உங்கள் முயற்சியில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அறிவுபூர்வமாக செயல்படுவது அவசியம். இன்று காதலுக்கு உகந்த நாள் இல்லை. தேவையில்லாத செலவினங்கள் ஏற்படலாம். தோல் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கடகம் : இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் மிக சரியானதாக அமையும். இன்று உங்களுக்கு கொடுக்கப்பட்ட உத்தியோக பணிகளை முடிக்க கால தாமதம் ஏற்படும். உங்களுடைய மனைவியுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவழிப்பீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்துடன்  இருக்கும்.

சிம்மம் : இன்று உங்களுக்கு நிறைய மாற்றங்கள் ஏற்படும். பயணங்கள் ஏற்படலாம். உங்களது உத்தியோக வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு சற்று குறைவாக இருக்கும். செலவினங்கள் அதிகரிக்கும். உங்களது தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை.

கன்னி : இன்று புதுப்புது வாய்ப்புகள் ஏற்படும். அது உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வேலைகளில் குழப்பங்கள் ஏற்படலாம். உங்கள் மனைவியுடன் மோதல்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இன்றைய நாளில் வரவும் செலவும் கலந்து உங்களுக்கு அமையும்.

துலாம் : இன்று உங்களுக்கு மந்தமான நாளாக அமையும். அதிர்ஷ்டத்தை நம்பாமல் கடின உழைப்பை நம்பினால் பலன் கிடைக்கும். உத்தியோக வேலையின் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் சரியான முடிவுகள் எடுக்க முடியாமல் குழப்பம் அடைவீர்கள். பணவரவு சற்று பின்னடைவை தரும். உடல் ஆரோக்கியம் மிதமாக இருக்கும்.

விருச்சிகம் : இன்று உங்களுக்கு பலவிதமான வாய்ப்புகள் கிடைக்கும். அது உங்களுக்கு திருப்தி அளிக்கும் விதமாக அமையும். உத்தியோக பணியை சிறப்பாக செய்வீர்கள். இன்று காதலுக்கு உகந்த நாள். பணவரவு அதிகமாக காணப்படும். உடல் ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

தனுசு : இன்று உங்களுக்கு சிறப்பான நாள். சிறிய முயற்சியில் மிகப்பெரிய வெற்றியை அடைவீர்கள். உங்களுடைய உத்தியோக பணிகள் சிறப்பானதாக அமையும். எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மகரம் : இன்று நன்மை மற்றும் தீமை என இரண்டும் கலந்து அமையும். உத்தியோக பணிகளில் அதிக கவனத்துடன் செய்யுங்கள். காதலுக்கு இன்று ஏற்ற நாள். வரவிற்கேற்ற செலவு என்ற விதத்தில் இன்று அமையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம் : இன்று மன அழுத்தம் அதிகரிக்கும். அதனால் செயல்களை திட்டமிட்டு செய்யுங்கள். உத்தியோக பணிகளை சிறப்பாக செய்வீர்கள். இன்று வரவை விட செலவு சற்று அதிகமானதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சராசரியாக இருக்கும்.

மீனம் : இன்று நீங்கள் சொந்த முடிவு எடுப்பதில் ஆர்வம் செலுத்துவீர்கள். உத்தியோக வேலைகளில் எளிமையான பணிகள் கூட இன்று உங்களுக்கு சுமையாக தெரியலாம். அதனால் அதிக திறமையுடன் செயல்படுங்கள். உங்கள் மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts
Indian Army Pulverizes Terrorist Launchpads
Virat Kohli - TEST Cricket
Vikram Misri