heat wave [file image]
Tamilnadu Weather: தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் மே மாதம் கூட தொடங்கவில்லை என்றாலும் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பல ,மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. இதன் காரணமாக அவ்வபோது வானிலை மையம் மஞ்சள் நிற அலர்ட்டையும் கொடுத்து வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் நிற அலர்ட் கொடுத்துள்ளது. அதன்படி, இன்று முதல் (ஏப்ரல் 28,29,30,மே 1, மே 2 ஆகிய தேதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் மக்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் நிற அலர்ட் கொடுத்துள்ளது.
அதைப்போல ஏப்ரல் 28, மே 2,3,4 ஆகிய 4 நாட்கள் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, வரும் மே 2ம் தேதி முதல் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…