தென்தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

Weather Report: தமிழ்நாட்டில் ஏப்ரல் 1ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான செய்திக்குறிப்பில், தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்றைய தினம் (29.03.2024) முதல் (01.04.2024) வரையில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதே போல ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரையில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
29.03.2024 முதல் 02.04.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது அடுத்த ஐந்து தினங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
April 18, 2025