heavy rain Orange Red alert [File Image]
வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் மற்றும் 23ம்தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 -4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என குறிப்பிட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்வது குறிப்பிடத்தக்கது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகள், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…