அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 4 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..!

Michaung Cyclon - Heavy rain

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன்காரணமாக இந்த 4 மாவட்டங்களிலும்,  பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்ட நிலையில், தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன்காரணமாக இந்த 4 மாவட்டங்களிலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த 4 மாவட்டங்களில் சென்னையில் தான் அதிகப்படியான பாதிப்பு காணப்படுகிறது.

சென்னையில் வேகமாக வடிந்து வரும் மழைநீர்.! 75000 மீட்பு பணியாளர்கள்.! தலைமை செயலர் தகவல்.! 

சென்னையை  பொறுத்தவரை மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.  தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமலே இருக்கிறது.  லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 21012025
donald trump dance
Instagram Reels
mythri movie makers naveen
US President Donald Trump
virat kohli BCCI
TRAI SIM CARD RULES