மோசமான நிர்வாகமும், பேராசையுமே காரணம்! இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆவேசம்!

santhosh narayanan

மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அங்கு வெள்ளம் ஏற்பட்டது.  மக்கள் வெள்ளத்தால் தத்தளித்து வரும் நிலையில், அவர்களை பாதுகாப்பாக இருக்க கோரி சினிமா பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். குறிப்பாக சூர்யா மற்றும் கார்த்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு 10 லட்சம் ஒதுக்கி கொடுத்தனர்.

அவரை போலவே நடிகர் ஹரிஷ் கல்யாணம் தன்னால் முடிந்த உதவி என்று சென்னை மக்களுக்காக 1 லட்சத்தை வழங்கினார். அவர்களை தொடர்ந்து தற்போது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை மீட்கும் மீட்புப் பணிகளுக்காக என்னிடம் ஒரு படகு மற்றும் பல பம்புகள் நிரந்தரமாக உள்ளன. அவர்கள் என்னை அழைக்கலாம் என்று கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” 10  வருடங்கள் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குறைந்தது முழங்கால் அளவு தண்ணீர் தேங்கிவிடுகிறது.  ஒவ்வொரு ஆண்டும் இந்த மாதிரி சமயத்தில் எங்கள் பகுதியில் குறைந்தது 100 மணிநேரம் மின்வெட்டு ஏற்படுவது  உண்மை. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், இது வரலாற்று ரீதியாக ஒரு ஏரியோ அல்லது ‘தாழ்வான’ பகுதியோ அல்ல.

மிக்ஜாம் புயலால் நயன்தாராவுக்கு இழப்பு…அடுத்தடுத்த மடிந்த ஹிட் திரைப்படங்கள்.!

சென்னையில் மற்ற எந்தப் பகுதியையும் விட எங்களிடம் ஏராளமான திறந்தவெளி நிலங்களும், சுறுசுறுப்பான குளங்களும் உள்ளன. வெறும் அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை ஆகியவை மழை நீர் மற்றும் கழிவுநீரை ஒரே ஒரு பாசனக் கால்வாயில் கொட்டுவதற்கு வழிவகுத்துள்ளது.  அது ஒவ்வொரு முறையும் ஆறு போல் பெருக்கெடுத்து எங்கள் குடியிருப்பாளர்களை உண்மையில் பாதிக்கிறது.

இந்த நேரத்தில் ஏதேனும் நோய் அல்லது மருத்துவ அவசரநிலை மரணத்தை கொண்டு வர காரணமாக அமைந்துவிடுகிறது.  எங்கள் மக்கள் பாதுகாப்பாக சென்றடையவும், ஜெனரேட்டர் பேக்கப் மூலம் ஹெட் டேங்க்களை நிரப்பவும், மீட்பு மற்றும் பிற முக்கியமான தேவைகளுக்கு உதவவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறேன். மீட்புப் பணிகளுக்காக என்னிடம் ஒரு படகு மற்றும் பல பம்புகள் நிரந்தரமாக உள்ளன.

சென்னைவாசிகளின் ஆன்மாவுக்குப் பாராட்டுகள், நான் எங்கு சென்றாலும் மிகவும் நெகிழ்ச்சியும் நேர்மறையும் இருக்கிறது. தீர்வுக்கான முயற்சி இருக்கும் என நம்புகிறேன். எனக்கு நியாயமற்ற எதிர்பார்ப்புகள் இல்லை, ஆனால் இப்போது இருப்பதை விட விஷயங்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். பாதிக்கப்பட்ட நீங்கள் அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்” என சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்