Puducherry WeatherUpdate [Image source file image]
Weather Update: தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், 7-ம் தேதி மற்றும் 8-ம் தேதி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 8ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த நான்கு தினங்களில் 2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அடுத்த நான்கு தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 39° 41° செல்சியஸ், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37° 39° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34° 37° செல்சியஸ்
இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்
அடுத்த நான்கு தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85 % ஆகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் க்ளென் மேக்ஸ்வெல்லும் ஒருவர். நடப்பாண்டு ஐபிஎல்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படத்தை சூர்யா…
சென்னை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ' ஜனநாயகன்' பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…
சென்னை : கோடை காலம் ஆரம்பித்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் அளவு 100…
டெல்லி : அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதையும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக,…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…