heavy rain tamil nadu [file image]
சென்னை : தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், (மே 15) 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. குமாரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக (மே 15) தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்த 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதன் காரணமாக சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது.
அதைப்போல, வரும் மே 18-ஆம் தேதி தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும், மே 19-ஆம் தேதி தேனி, தென்காசி, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் : மாவட்டம் அவிநாசியில் புதுமணப் பெண் ரிதன்யா (27) தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கைது செய்யப்பட்ட அவரது…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, 2025 ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் பயணமாக…
லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று…
குஜராத் : மாநிலத்தில் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த காம்பிரா-முக்பூர் பாலத்தின் ஒரு…
சென்னை : தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (TNDALU), 2025-2026 கல்வியாண்டிற்கான 3 ஆண்டு எல்.எல்.பி. (LL.B) சட்டப்படிப்பு…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (11-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…