heat wave [File Image]
Heat wave: இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் 110.3 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. அதேபோல், தமிழகத்தில் 15 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதில், அதிகபட்சமாக ஈரோடு மற்றும் சேலத்தில் 108.14° பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.
ஒடிசாவின் புவனேஸ்வர், ஆந்திராவின் கடப்பாவில் அதிகபட்ச வெப்பம் பதிவானது. அதற்கு அடுத்தப்படியாக ஈரோடு மற்றும் சேலத்தில் வெப்ப அலை வீசியதாகவும், 108.14° பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வெயிலால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் கவனமாக இருக்கவும். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே அனாவசியமாக வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், கடலோர மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும். தென்காசி, கூடலூர், ஊட்டி ஆகிய பகுதிகளில் கோடை மழையை எதிர்பார்க்கலாம். சென்னையை பொறுத்தவரை மழைக்கான வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…