மதுரையில் எய்ம்ஸ் அமைக்க இன்னும் இடம் ஒதுக்கவில்லை – மத்திய அரசு தகவல்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மாநில அரசு இன்னும் இடம் ஒதுக்கப்பட வில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி இந்த தகவலானது கிடைக்கப் பெற்றுள்ளது.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நீண்ட நாளாக கோரிக்கை இருந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம் மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினர். மத்திய அரசு அதற்கான நிதி 251 கோடியை ஒதுக்கியது.
அடிக்கல் நட்டு ஆறு மாதம் ஆகியும் மருத்துவமனை கட்டுவதற்க்கான எந்த வேலையும் நடைபெற நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. அதில்,மருத்துவமனை கட்ட மாநில அரசானது எந்த இடத்தையும் ஒதுக்கவில்லை என்றும் அதனால் தாமதமாகிறது என்ற தகவலை மத்திய அரசு கூறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025