முதலில் மம்தா பானர்ஜி..இப்போது சந்திரசேகர ராவ்…!நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டம் ஜூன் 15-ம் தேதி அதாவது இன்று டெல்லியில் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் மத்திய அரசின் அமைச்சர்கள் என பல்வேறு தரப்பில் இருந்தும் ஒரு பெரிய அளவிலான கூட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க போவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் வாயிலாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025