உலகக்கோப்பையில் இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்

நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ் அணி மோதியது.இப்போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 262 ரன்கள் எடுத்தது.பின்னர் இறங்கிய ஆப்கானிஸ்தான் 47 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் 200 ரன்கள் எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியிடம் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி நேற்றைய போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் விளையாடிய ஏழு போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெற்றியை பதிவு செய்யாமல் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது.ஒரு போட்டியில் கூட வெற்றிபெறாமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
மேலும் ஆப்கானிஸ்தான் அணி இதுவரை உலகக்கோப்பையில் 13 போட்டிகளில் விளையாடி உள்ளது.அதில் ஸ்காட்லாந்து எதிராக ஒரு போட்டியில் மட்டுமே ஆப்கானிஸ்தான் வெற்றி பதிவு செய்து உள்ளது.
தோல்வி
தோல்வி
ஸ்காட்லாந்து எதிராக வெற்றி
தோல்வி
தோல்வி
தோல்வி
தோல்வி
தோல்வி
தோல்வி
தோல்வி
தோல்வி
தோல்வி
தோல்வி
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025