வழக்கு பதியாத காவலர்கள் மீது வழக்கு பதியுங்கள் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஹெல்மெட் அணியாமல் வருவோர் மீதி வழக்கு பதியாமல் அனுப்பும் காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய சீனை உயர் நீதி மன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று முதலில் சென்னை நீதி மன்றம் உத்தரவிட்டது. இதனை நடைமுறைக்கு கொண்டு வந்து கடுமையாக அமல்படுத்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கடந்த வாரம் நீதிமன்றம் கேள்வி எழுப்பினர். ஹெல்மெட் அணியாமல் செல்வோர் வாகன உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், ஹெல்மெட் அணியாமல் செல்வோர் வழக்கு பதியாமலும் தங்களது பொறுப்பை சரிவர செய்யாமல் இருக்கும் காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025
பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!
May 10, 2025