தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா!

நேற்றைய போட்டியில் இலங்கை , தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது . இப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இலங்கை அணி 49.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 203 ரன்கள் எடுத்தது.பின்னர் தென்னாப்பிரிக்காஅணி 37.2 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த இரு அணிகளும் இதுவரை உலககோப்பையில் ஆறு போட்டிகளில் மோதி உள்ளது. விளையாடிய அனைத்து போட்டியிலும் இலங்கை அணி டாஸ் வென்றது. நேற்று நடைபெற்ற போட்டியில் தான் முதல் முறையாக தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு அணிகளும் இதுவரை உலககோப்பையில் விளையாடிய ஆறு போட்டிகளில் நான்கு போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்று உள்ளது.அந்த நான்கு போட்டிகளில் கடைசியாக விளையாடிய மூன்று போட்டியிலும் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்று உள்ளது.
தற்போது புள்ளிபட்டியலில் இலங்கை அணி 6 புள்ளிகள் பெற்று ஏழாம் இடத்திலும் , தென்னாப்பிரிக்கா அணி 5 புள்ளிகள் பெற்று ஆறாம் இடத்திலும் உள்ளது.
1992 (இலங்கை)
1999 ( தென்னாப்பிரிக்கா )
2003 (டை )
2007 (தென்னாப்பிரிக்கா)
2015 (தென்னாப்பிரிக்கா)
2019 (தென்னாப்பிரிக்கா)
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025