போக்குவரத்து ஊழியர்களுக்கு ஜூன் மாத ஊதியம் செலுத்தப்பட்டது- போக்குவரத்துத்துறை தகவல்!

தமிழக அரசின் போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஜூன் மாத ஊழியம் வழங்கப்பட்டு விட்டதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஜூன் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் இன்று காலை முதல்எந்த பேருந்துகளை இயக்காமல் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இன்று காலை முதல் சென்னை மாநகரத்தில் எந்த வித பேருந்துகளும் இயங்கவில்லை. முறையாக எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீரென நடந்த வேலை நிறுத்ததால் பள்ளி, கல்விக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என்று அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
பின்னர், நடந்த பேச்சுவார்த்தையில் அனைத்து ஊழியர்களுக்கும் இன்று மாலைக்குள் முழு ஊதியம் வழங்கப்படும் என்று உத்தரவளித்தனர். இதன் அடிப்படையில் , வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை அனைவரது வங்கிக்கணக்கிலும் ஊதியம் செலுத்தப்பட்டது என்று போக்குவரத்து சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025