கையூட்டு பெற்ற 200 அரசு ஊழியர்கள் பதவி காலி..!400 பேரின் பதவி உயர்வு ரத்து -அதிரடி காட்டும் அரசு

லஞ்சம் வாங்கிய 200 அரசு ஊழியர்கள் சீட்டு கிழிக்கப்பட்டு மேலும் இந்த புகாரில் சிக்கிய 400 பேருக்கு பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
உபியில் யோகி ஆதிநாத் தலையிலான அரசு செயல்பட்டு வருகிறது.இவர் போருப்பேற்ற நாளில் இருந்து அம்மாநிலத்தில் பல்வேறு மாற்றங்களையும்,அதிரடியான அறிவிப்புகளையும் செயல்படுத்தி வருகிறார்.இந்நிலையில் அண்மையில் அரசு ஊழியர்கள் காலை 10 மணிக்கு எல்லாம் அலுவலகத்தில் கால் வைக்கவேண்டும் இல்லை என்றால் அவர்களின் சம்பளம் கட் செய்யப்படும் என்று அறிவித்து உத்தரவிட்டார்.
தற்போது லட்சம் வாங்கிய 200 அரசு ஊழியர்களின் சீட்டு கிழிக்கப்பட்டு மேலும் அதனுடன் தொடர்புடைய 400 பேரின் பதவி உயர்வை ரத்து செய்து உத்தரவிட பட்டுள்ளது.
நம் கையெழுத்து மற்றும் நம் கடமை விலைமதிப்பிலாது அதனை இப்படி கையூட்டு பெற்று விற்க எப்படி மனம் வருகிறது என்று தெரியவில்லை.வாங்குவது குற்றம் என்றால் கொடுப்பதும் குற்றமாகும் இது குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025