நீதிமன்ற வளாகத்தில் விரக்தியில் தற்கொலைக்கு முயன்ற கைதி! காரணம் என்ன தெரியுமா?

கடலூர் மாவட்டம் சாத்தனத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் அரசு பேருந்தை சேதப்படுத்தியதாக 9 மாதங்களுக்கு முன்பு, கைது செய்யப்பட்டார். இவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்பு, இவரை ஜாமினில் எடுக்க யாரும் வரவில்லை.
இதனையடுத்து சக்திவேல் நேற்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், தன்னை ஜாமினில் எடுக்க யாரும் முன்வரவில்லை என்ற காரணத்தினால் விரக்தி அடைந்து, அங்கு கழிவறையில் கிடந்த கண்ணாடி துண்டால் தனது இடது கையில் கிழித்து கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் இவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பின் அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025