பப்ஜி விளையாட தாய் தடை ! தற்கொலை செய்து கொண்ட 17-வயது சிறுவன் !

சமீபகாலமாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் கட்டி போட்டு கொண்டு இருப்பது என்றால் அது பப்ஜி விளையாட்டுதான் இந்த விளையாட்டுக்கு பலர் அடிமையாகி உள்ளனர்.
இந்த விளையாட்டை விளையாடும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் பலர் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாக பலர் குற்றச்சாற்றையை எழுப்பினர்.இதனால் நேபாளம் ,ஈரான் போன்ற நாடுகளில் பப்ஜி விளையாட்டு தடைசெய்யப்பட்டு உள்ளது.
பப்ஜி விளையாட்டை இந்தியாவிலும் தடைசெய்ய கோரி பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜீ ண்ட் பகுதியை சார்ந்த 17 – வயது சிறுவன் தனது செல்போனில் தொடர்ந்து பப்ஜி விளையாட்டை விளையாடி வந்து உள்ளார்.
இதனால் அந்த சிறுவன் படிப்பில் அதிக கவனம் செலுத்தாமல் பப்ஜி விளையாடி கொண்டு இருந்ததால் அவரது தாய் செல்போனை பிடுங்கி வைத்து கொண்டு இனிமேல் பப்ஜி விளையாட்டை விளையாட கூடாது என கண்டித்து உள்ளார்.
தாய் விளையாட கூடாது என கண்டித்ததால் மனமுடைந்த அந்த சிறுவன் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மேலும் இந்த சிறுவனின் தந்தை போலீஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025