தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் – பிசிசிஐ நியமனம் !

இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டை இந்திய அணியின் தடுப்பு சுவர் என ரசிகர்கள் செல்லமாக அழைப்பது உண்டு.ராகுல் டிராவிட் ஓய்வு பெற்ற பிறகு 19 வயதிற்குட்பட்ட இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
இந்திய அணிக்கு சிறந்த இளம் வீரர்களை உருவாக்கி வரும் பொறுப்பை செய்து வருகிறார். இந்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட்டை பிசிசிஐ நியமனம் செய்து உள்ளது.
இளம் வீரர்களை உருவாக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தேசிய அகாடமியை 2000-ம் ஆண்டு உருவாக்கியது.தற்போது கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட்டை பிசிசிஐ அறிவித்து உள்ளது.
வீரர்களுக்கு பயிற்சி , ஊக்கம் , ஆலோசனை கொடுப்பது ஆகிய அனைத்து பொறுப்பையும் ராகுல் டிராவிட்டிடம் பிசிசிஐ ஒப்படைத்து உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025