ஓய்விற்கு பிறகு பாஜகவில் இணைய உள்ளாரா தோனி ?

இந்திய அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் தோல்வியடைந்து இந்திய அணி உலக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
இந்த உலகக்கோப்பை தொடரில் இருந்து கிரிக்கெட்டை விட்டு தோனி ஓய்வு பெற உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. தற்போது தோனியின் ஓய்வு பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த விவாதத்தில் தோனி ஓய்வு பிறகு அடுத்ததாக அவர் செய்வர் என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஓய்வுக்குப் பிறகு தோனி பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சஞ்சய் பஸ்வான் கூறியுள்ளார். பாஜகவில் இணைவது தொடர்பாக தோனியிடம் நீண்ட நாள்களாக பேசி வருவதாகவும் அவர் கூறினார். ஆனால் தோனி ஓய்வை அறிவித்த பின்னரே இறுதி முடிவு கூறமுடியும் என சஞ்சய் பஸ்வான் தெரிவித்து உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!
July 8, 2025
“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!
July 8, 2025