பீகாரில் ஹிருத்திக் ரோஷனின் ‘சூப்பர் 30’ படத்திற்கு வரி விலக்கு!

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் ஆனந்த் குமார். இவர் ஒரு கணித ஆசிரியராவார். இவர் 2002-ம் ஆண்டு முதல் சூப்பர் 30 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, 30 ஏழை மாணவர்களை தேர்ந்தெடுத்து இத்திட்டத்தின் மூலம், ஜேஇஇ நுழைவு தேர்வுக்கு தயார்படுத்தி அவர்களை வெற்றி பெற செய்துள்ளார்.
இதனையடுத்து, இவரது வாழ்க்கையை கதையை ஹிந்தியில் படமாக்கியுள்ளனர். இந்த படத்தை விகாஸ் பால் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் ஆனந்த் குமாராக நடித்துள்ளார். இப்படம், கடந்த 12-ம் தேதி ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் பீகாரை சேர்ந்த கணித ஆசிரியரை பற்றிய படம் என்பதாலும், சமூகத்துக்கு தேவையான கருத்தை செல்வதாலும் அம்மாநில அரசு இப்படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!
July 7, 2025
அரோகரா.. அரோகரா.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது மகா கும்பாபிஷேகம்..!
July 7, 2025