இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை கவுரவப்படுத்தி விருது வழங்க நியூசிலாந்து முடிவு!

Default Image

கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதி போட்டி நடைபெற்றது .இப்போட்டியில் இங்கிலாந்து அணி முதல் முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 84 ரன்கள் குவித்ததன் மூலம் இங்கிலாந்து அணி உலக கோப்பை  பெரும் உதவியாக இருந்தது.

இறுதி போட்டியில்  பென் ஸ்டோக்ஸ்  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.நடப்பு உலகக்கோப்பையில் பென் ஸ்டோக்ஸ் 465 ரன்கள்  மற்றும் 7 விக்கெட்டை பறித்தார்.

பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணிக்காக விளையாடினாலும் அவர் நியூஸிலாந்து நாட்டை சார்ந்தவர் 12 வயத்தில் இங்கிலாந்திற்கு குடும்பத்துடன் சென்று விட்டனர். அதனால் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வந்தார்.

பென் ஸ்டோக்ஸ் பெற்றோர் திரும்பி நியூஸிலாந்திற்கு திரும்பி கிறிஸ்ட்சர்ச்சில் வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடிய பென் ஸ்டோக்கை கவுரவிக்க நியூஸிலாந்து முடிவு செய்து உள்ளது.இந்த வருட சிறந்த நாட்டவர் விருதுக்கு பென் ஸ்டோக்ஸ் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த விருது பட்டியலில் நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் சில வீரர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்