தனது பாணியில் வாழ்த்து தெரிவித்த கவிப்பேரரசு! ‘வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை’!

சந்திராயன் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த பெருமைமிகு சாதனையை பல தலைவர்கள் பாராட்டி புகழ்ந்து வருகின்றனர். பிரதமர் மோடி, வெங்கையா நாயுடு, ராம்நாத் கோவிந்த் என பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ் சினிமாவின் கவிப்பேரரசு வைரமுத்து தனது பாணியில் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அதில், ‘ 130கோடி இந்தியர் உதடுகள் முணுமுணுக்கின்றன. “வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை”. இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்தி இந்தியா எழுந்து நின்று கைதட்டுகிறது.’ என தான் எழுதிய பாடலை உட்புகுத்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025