தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் எவ்வளவு மணி நேரம் ஓடும் தெரியுமா?! வெளியான அதிகாரபூர்வ தகவல்!

தல அஜித் தற்போது தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் ஏற்கனவே சென்சார் செய்யப்பட்டு யு/ ஏ சான்றிதழ் பெற்றது நமக்கு தெரியும். தற்போது இப்படத்தின் சென்சார் சான்று வெளியாகியுள்ளது. இதில் இப்படமானது 158 நிமிடங்கள் ஓடும் என கூறப்பட்டுள்ளது. அதாவது, படம் 2 மணி நேரம் 38 நிமிடங்கள் ஓடும் என கூறப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
July 30, 2025