கேரளாவில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆக உயர்வு !

கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தில் சிக்கி 88 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில நாள்களாக கேரளாவில் தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது.இதனால் கடந்த 8 தேதி முதல் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
இதுவரை 40 பேர் காணவில்லை.மேலும் 34 பேர் காயமடைந்துள்ளனர் . 2.5 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.கனமழை பெய்து வருவதால் வெள்ளத்தால் கேரளாவில் 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 72 பேர் இருந்தனர். தற்போது உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்து உள்ளது.மேலும் தேசிய பேரிடர் மீட்டு படையினரும் , இராணுவ வீரர்களும் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025