கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தில் சிக்கி 88 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில நாள்களாக கேரளாவில் தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது.இதனால் கடந்த 8 தேதி முதல் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
unknown nodeஇதுவரை 40 பேர் காணவில்லை.மேலும் 34 பேர் காயமடைந்துள்ளனர் . 2.5 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.கனமழை பெய்து வருவதால் வெள்ளத்தால் கேரளாவில் 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 72 பேர் இருந்தனர். தற்போது உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்து உள்ளது.மேலும் தேசிய பேரிடர் மீட்டு படையினரும் , இராணுவ வீரர்களும் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.